தமிழ்நாடு ஆளுநரை சந்தித்து ஏன்? ஒன்றிய இணை அமைச்சர் ட்வீட்

 
LMurugan-RNRavi

தமிழ்நாடு ஆளுநர் ரவிவை ஒன்றிய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் சந்தித்தார்.

சென்னை ராஜ்பவனில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்தித்ததாக ஒன்றிய இணை அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒன்றிய இணை அமைச்சர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், “தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை. சென்னையில் சந்தித்தேன். அவரது பரந்த அனுபவம் நமது மாநிலத்தின் நலனுக்காக மதிப்புமிக்க வழிகாட்டுதலை வழங்குகிறது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த அக்டோபர் மாதமும் ஆளுநரை எல். முருகன் சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web