முதலமைச்சர் பற்றி ஆபாசமாகப் பேசிய சாட்டை துரை முருகன் நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கம்?

 

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசி மீண்டும் கைதாகியுள்ள யூடியூபர் சாட்டை துரைமுருகனை நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  பெயரில்  இன்றைய தேதியிட்ட அறிக்கை வெளியானது

அதில், திருச்சி மேற்கு தொகுதியைச் சார்ந்த  அ.துரைமுருகன் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதற்கு கட்சி ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின் படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை  உறுப்பினரிலிருந்து முழுமையாக நீக்கப்படுகிறார். அவருடைய கருத்திற்கோ, செயலுக்கோ இனி கட்சி  பொறுப்பேற்காது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

NTK

ஆனால் இது போலியான அறிக்கை என்றும், முன்னதாக துரைமுருகன் நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டபோது வெளியான அறிக்கையில் தேதியை போட்டோஷாப் செய்து வெளியிட்டுள்ளனர் என்றும் நாம் தமிழர் கட்சியினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

From around the web