தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறப்பு எப்போது..? அமைச்சர் சாமிநாதன்

 
Saminathan

தமிழ்நாட்டில் திரையரங்குகளை திறப்பது குறித்து ஆலோசித்துதான் முடிவெடுக்க முடியும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை காரணமாக, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, திரையரங்குகள், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவை தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால், திரையரங்குகளை மீண்டும் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் நடைபெற்றுவரும் பராமரிப்பு பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது,

ஒளிப்பதிவு திருத்த சட்டத்தினால் யாரேனும் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு அரசு துணை நிற்கும்.  கொரோனா மூன்றாவது அலை குறித்து ஒன்றிய அரசும், உலக சுகாதார அமைப்பும், மருத்துவ நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை எச்சரிக்கை இருப்பதால் தமிழ்நாட்டில் திரையரங்குகளை திறப்பது குறித்து முதல்வர் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்துதான் முடிவெடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

From around the web