தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது..?

 
School

9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உறுதியளித்ததாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோ தெரிவித்தார்.

உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா இந்தியாவிலும் கடந்த ஆண்டு (2020) மார்ச் மாத இறுதியில் பரவ தொடங்கியது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து புதுவையில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அனைத்தும் மூடப்பட்டன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உறுதியளித்ததாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோ தெரிவித்தார்.

இதுகுறித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோ சென்னை தி.நகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை இன்று சந்தித்தேன்.

அப்போது அவரிடம், 'ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு முழுமையான அளவு பாடங்களை நடத்த முடியவில்லை. எனவே, தமிழ்நாட்டில் விரைவில் பள்ளிகளை திறக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தேன். அதற்கு அவர், '9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என அமைச்சர் உறுதியளித்தார்” என்று கூறினார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், அனைத்து மாநில அரசுகளும் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசித்து வருகின்றன. புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் வரும் 16-ம் தேதி முதல் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web