நேரலையில் சட்டப்பேரவை நிகழ்வு எப்போது..? சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 
CM-Stalin

புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை நடைபெறும் போது நிகழ்வுகளை நேரலையில் தர நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்படும் என தேர்தலின் போது வாக்குறுதி அளித்ததாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்,

கலைவாணர் அரங்கில் சில காரணங்களால் பேரவை கூட்டத்தை நேரலை செய்ய முடியவில்லை. புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை நடக்கும் போது நேரலை செய்யப்படும் என்றார்.

ஆளும் கட்சி எதாவது ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முயற்சிப்பதும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதும், எதிர் கட்சியினரை சபாநாயகர் வெளியே அனுப்புவதும் வழக்கமாவிவிட்ட இந்த சூழ்நிலையில் சட்டப்பேரவையை மக்களே நேரடியாகப் பார்க்கும் வகையில் தொலைக்காட்சி நேரலை உடனே தேவை என்ற கருத்து நீண்ட நாட்களாவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web