ஒரு மாநிலத்தை சிறுசிறு மாநிலங்களாக உடைத்தால் என்ன ஆகும்? இதெல்லாம் அந்த மேஜருக்குத் தெரியாதா என்ன?

 
Tamil Nadu

மேஜர் மாலன் தினமணியில் ஒரு மடையன் எப்படி எழுதுவானோ அப்படி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதையும் தினமணி வெளியிட்டுள்ளது. கொங்குநாடு தனிமாநிலமாக பிரிவதில் தவறில்லை என்று அம்பேத்கரை இழுத்துவந்து மேற்கோள் காட்டுகிறார்.

கட்டுரையில் அம்பேத்கர் மொழிவாரி மாநிலங்களை எதிர்த்தார் என்று சொல்கிறார். கட்டுரையில் ஒரு மொழி பல மாநிலங்களில் பேசப்படலாம் என்று சொல்கிறார். உதாரணத்துக்கு பீகாரில் ஹிந்தி பேசுகிறார்கள் என்று சொல்கிறார். ஆனால் போஜ்பூரி மொழியை அழித்து இந்தி அங்கே புகுத்தப்பட்டதை சாமர்த்தியமாக கட்டுரையில் மறைக்கிறார். ஆந்திராவில் தெலுங்கானாவில் தெலுங்கு பேசுகிறார்கள். ஆனால் நாளை அங்கும் தெலுங்கு மறைந்துபோகும். ஏனெனில் ஒரு மாநிலத்தை சிறுசிறு மாநிலங்களாக உடைக்கும்போது அவர்களது தனித்த மொழியை அழிப்பது சுலபம். ஹிந்தியை சுலபமாக புகுத்திவிடலாம்.

வடக்கே எல்லா மாநிலங்களிலும் ஹிந்தி பேசுகிறார்கள். தெற்கில் மட்டும் விதிவிலக்காக நாலு மாநிலங்கள் உள்ளன. கொங்குநாட்டை பிரித்துவிட்டால் அது ஏற்கனவே ஹிந்தி பேசும் மார்வாடிகள் கையில் போகும்போது போஜ்பூரி மொழிபோல தமிழ் மாறும். ஒரே மொழி என்பதை இப்படி மறைமுகமாக கொண்டுவரும் திட்டம்தான் இது.

மொழிவாரிமாநிலங்கள் பிரிக்கப்பட்டது ஆர்.எஸ்.எஸ்.சுக்கு ஏற்புடையதாக இல்லை. அவர்கள் செயல்திட்டம் வேறு. இந்தியாவை நூறு யூனியன்பிரேதசங்களாக பிரித்து எல்லா இடங்களிலும் டம்மி முதல்வரை நிறுவி, அதிகாரமிக்க கவர்னரை நிறுவி எல்லா அதிகாரங்களையும் மத்தியஅரசு நோக்கி குவிப்பதே. இதை நான் சொல்லவில்லை.

பத்திரிக்கையாளர் மணி அண்மையில் ஒரு நேர்காணலில் சொல்லியுள்ளார். தினமணியில் மாலன் எழுதியுள்ள கட்டுரையை பாருங்க. ஒரு மூன்றாம்கிளாஸ் மாணவனை அழைத்து கட்டுரை எழுதச்சொன்னால் கூட இப்படி அபத்தமாக இருக்காது.

- விநாயக முருகன்

படம் : நன்றி -TN.gov.in

From around the web