என்ன சாதித்துக்கொள்ள போகிறாய் பெண்ணினமே ?

 
man woman

ஆண்.. அழகானவன் !!
ஆதிக்கம் நிறைந்தவன் !!
சுயத்தில் ஆண்மை மிளிர்பவன் !!
அவனின் ஆண்மையுடன் போட்டியிட உலகில் வேறு உயிரினம் இல்லை !!

அவனை அவனாகவே இருக்கவிட்டு
ரசிப்பதில்தான் அழகு !!
அவனின் இயல்பில் கூடுதல்
ஆண்மை மிளிர்வதை காணலாம் !!
அவனின் ஒவ்வொரு அங்கங்களையும்
சளைக்காமல் ரசிக்கலாம் !!

ஆனால்..

அவன் இயல்பை தொலைக்கச்செய்து
என்ன சாதித்துக்கொள்ள போகிறாய் பெண்ணினமே ??

ஆண்மையை ரசிக்கத் தெரியாதவள் மட்டுமே 
அவனை அடிமை படுத்திப் பார்க்கிறாள்..
முட்டாளாக்கி வேடிக்கை பார்க்கிறாள்..
சுய இரக்கம் காண்பித்து அவன் புத்தியை மழுங்கடிக்கிறாள்..

இதுபோல் நடந்து கொள்வதால்
அங்கு இழந்து நிற்பது அவனின்
ஆண்மை மட்டுமல்ல..
உன் பெண்மையும்தான் !!

- சசிகலா

From around the web