மேற்கு வங்காளம் சபதத்தில் வெல்வாரா பிரசாந்த் கிஷோர்?

 
மேற்கு வங்காளம் சபதத்தில் வெல்வாரா பிரசாந்த் கிஷோர்?

மேற்கு வங்காளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெற்றால், தேர்தல் பணி செய்யும் தொழிலையே விட்டு விடுகிறேன் என்று பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார். தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 275 தொகுதிகளுக்கான் முன்னிலை நிலவரம் வந்துள்ளது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 187 இடங்களிலும், பாஜக 85 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.  மம்தா பானர்ஜி மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்பது உறுதியாகியுள்ளது.

எட்டுக் கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தியும், பிரதமரும் உள்துறை அமைச்சரும் தொடர்ந்து அங்கே முகாமிட்ட போதிலும் 85 இடங்களையே பெற்றுள்ளனர். பிரசாந்த் கிஷோர் சொன்னது போல் 100 இடங்களைக் கூட பாஜக தாண்டாது என்றே தெரிகிறது.

போட்ட சபதத்தில் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெறுவார் என்பதே தற்போதைய நிலவரம்.

From around the web