தமிழக மக்கள் தொகைக்கு ஏற்ப தடுபூசிகளை ஒதுக்க வேண்டும்... மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

 
CM-Stalin

தமிழகத்திற்கு போதிய தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. 18 வயதினர் உட்பட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், தமிழகத்திற்கு போதிய தடுப்பூசிகள் வழங்கக்கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில்,

மத்திய அரசிடமிருந்து போதிய அளவில் தடுப்பூசிகள் வரப்பெறவில்லை. செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தி உடனே பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மத்திய அரசு மூலம் 25.84 லட்சம் தடுப்பூசியும் பிற வழிகள் மூலம் 16.74 லட்சம் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மூலமும், பிறவழிகள் மூலம் தலா 50 லட்சம் தடுப்பூசிகளை வழங்க வேண்டும். தமிழக மக்கள் தொகை, கொரோனா பாதிப்புக்கு ஏற்ப தடுபூசிகளை ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

From around the web