Updates : தமிழ்நாடு 2021! திமுக கூட்டணி 71 தொகுதிகளில் வெற்றி 88 இடங்களில் முன்னிலை

 
Updates : தமிழ்நாடு 2021! திமுக கூட்டணி 71 தொகுதிகளில் வெற்றி 88 இடங்களில் முன்னிலை

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.  முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அடுத்தடுத்த சுற்றுகள் எண்ணிக்கையில் திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அறுதிப் பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை விட கூடுதலான தொகுதிகளை திமுக தனித்து பெற்றுள்ளது.

மாலை : 7:45  : திமுக அணி 71 இடங்களிலும் அதிமுக அணி 32 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் திமுக அணி 88 இடங்களிலும், அதிமுக அணி 43 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது

காலை 10:30 : திமுக அணி 136 இடங்களிலும் அதிமுக அணி 92 இடங்களிலும் முன்னிலை

காலை 9:45 : திமுக அணி 117 இடங்களிலும் அதிமுக அணி 83 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது

காலை 8:27 : சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை. அண்ணாநகர் தொகுதியில் மோகன் அதிக தபால் வாக்குகள் பெற்றுள்ளார்.

காலை 8:25 : திமுக கூட்டணி 15 இடங்களில் முன்னிலை. அதிமுக கூட்டணி 3 தொகுதிகளில் முன்னிலை

From around the web