உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு! பிரதமர் மோடியின் அரசு பாரபட்சம் காட்டுகிறது!

 
ராஜாஜி செய்ததையே அமித்ஷாவும் செய்கிறார் – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக திமுக இளைஞரணிச் செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய தொகுதிப் பக்கம் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். குப்பைகளை அகற்றுதல், சாக்கடையை சுத்தம் செய்தல்,  சாலைகளை சீரமைத்தல், கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்குதல். கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைத்தல், தொகுதி மக்களிட்ம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி போடச் செய்தல், கொரோப்னா தடுப்பு மையங்கள் திறத்தல் போன்றவற்றில் மட்டுமே அக்கறையுடன் செயல்பட்டு வந்தார் உதயநிதி ஸ்டாலின். அரசியல் கருத்துக்கள் தெரிவிப்பதை அறவே நிறுத்தியிருந்தார் உதயநிதி ஸ்டாலின்./

நேற்று கோவைக்குச் செல்வதற்கு முன்பு வரை முதலமைச்சர் ஸ்டாலினும் அரசியல் ரீதியாக எந்த விதமான கருத்துக்களையும் தெரிவிக்க வில்லை. PPE கிட் அணிந்து கொரோனா நோயாளிகளை சந்தித்து ஆறுதல் தெரிவித்து விட்டு வந்த முதலமைச்சர் எங்கள் செயல்பாடுகளை விமர்சிப்பவர்கள், நாங்கள் உருவாக்கியுள்ள கட்டமைப்புகளை நேரில் வந்து பார்த்துவிட்டு கருத்து சொல்லட்டும் என்று மிகவும் நாசுக்காக முதன் முதலில் அரசியலைத் தொடும் கருத்தைச் சொல்லியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்நிலையில் மத்திய அரசை கண்டிக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின், தேர்தலுக்குப் பிறகு முதன் முதலாக விமர்சனம் செய்துள்ளார்.

“கொரோனாவை வெல்ல தடுப்பூசியே ஆயுதம். மக்களும் தடுப்பூசியிட ஆர்வத்துடன் முன்வருகின்றனர். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கோவையில்தான் அதிகளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் தடுப்பூசிகளை வழங்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதை புள்ளிவிவரங்கள் அம்பலப்படுத்துகின்றன.

 தமிழக மக்கள் தொகையில் 10%அளவுக்கே தடுப்பூசிகளை தந்துள்ள ஒன்றிய அரசு, பாஜக ஆளும் குஜராத்,கர்நாடக மாநிலங்களுக்கு அவற்றின் மக்கள் தொகையில் 20%அளவுக்கு வழங்கியுள்ளது. இப்பேரிடர் நேரத்தில் அனைத்து மாநிலங்களையும் ஒன்றாக கருதி பாரபட்சமின்றி தடுப்பூசிகளை வழங்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும்,” என்று உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் கூறியுள்ளார்.

ஒற்றைச் செங்கலில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் காட்டி இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த உதயநிதியின் கருத்துக்களுக்கு வட இந்தியாவிலும் முக்கியத்துவம் கிடைத்து வருகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஜி.எஸ்.டி கவுன்சிலில் மக்கள் தொகை, பொருளாதாரம் போன்ற அடிப்படையில் மாநிலங்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள நிலையில், மக்கள் தொகை அடிப்படையில் தடுப்பூசி கொடுக்க வேண்டும் என்று உதயநிதி கோரிக்கை வைத்துள்ளார்.

பல்லாண்டுகளுக்குப் பிறகு மாநில உரிமை, ஒன்றியம் போன்ற கூட்டாட்சி தத்துவங்கள் இந்திய அரசியலில் பேசு பொருள் ஆகிவருகிறது.

From around the web