அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!

 
அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!

சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ள திமுக கூட்டணியின் வெற்றியைத் தொடர்ந்து பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செய்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் போது மிகவும் உணர்ச்சிப் பெருக்கோடு இருந்ததை காண முடிந்தது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் தமிழக மக்களுக்கு நன்றி செலுத்தினார். எந்த நம்பிக்கையுடன் இந்த பொறுப்பை மக்கள் ஒப்படைத்துள்ளார்களோ, அந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் எங்கள் ஆட்சி அமையும். 

கலைஞர் கருணாநிதி 5 முறை தமிழக முதலமைச்சராக ஆற்றிய பணிகளை உணர்ந்து, அவர் வழியில் 6வது முறையாக ஆட்சியில் அமரும் திமுக, அவருடைய வழியில் ஆட்சியை நடத்தும். 6 வது முறையாக கருணாநிதி ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற ஏக்கத்தை போக்கும் வகையில் இந்த தீர்ப்பு வந்துள்ளது.

வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்லாமல், வாக்களிக்கத் தவறியவர்களுக்காகவும் எங்கள் பணி அமையும். தேர்தல் நேரத்தில் கூறியிருந்த வாக்குறுதிகளை எல்லாம் படிப்படியாக நிறைவேற்றும் முயற்சியில் பணியாற்றும் உறுதியை தருகிறேன். 10 ஆண்டுகால தொலைநோக்குப் பார்வை க்கான செயல்திட்டங்களையும் நிறைவேற்றுவோம். அண்ணா, கலைஞர் வழியில் நின்று ஆட்சியை நடத்துவோம் என்றும் தெரிவித்தார்.

  

From around the web