இந்த 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

 
School-leave

கனமழை காரணமாக தூத்துக்குடி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் நேற்று முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் நேற்று அதிக கனமழை பெய்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகாலை தொடங்கிய மழை பிற்பகலில் கனமழையாகவும், அதன் பின்னர் அதிகன மழையாகவும் கொட்டித் தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது.

சென்னை உள்பட  பல்வேறு மாவட்டங்களில்  இன்றும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழை காரணமாக தூத்துக்குடி, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web