திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் காத்திகை தீபத்தை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது

 
Thiruvannamalai

கார்த்திகை தீப திருவிழவை முன்னிட்டு 11 நாட்கள் காட்சி தரும் வகையில் மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. தினமும் கோவிலின் 5-ம் பிரகாரத்தில் காலையில் விநாயகர், சந்திரசேகரர் உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் உலாவும் நடக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீப தரிசனம் இன்று நடைபெற்றது. 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.   எவ்வளவு மழை பெய்தாலும் தொடர்ந்து 11 நாட்கள் காட்சி தரும் வகையில் மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகத்தினால் கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டும் மகா தீபத்தை பக்தர்கள் மலையேறி சென்று தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டு உள்ளது.மலைக்கு பக்தர்கள் செல்வதை கண்காணிக்க சிறப்பு கமாண்டோ படையினர் 120 பேர் மலைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

From around the web