ரேஷனில் இனி இவர்களுக்கு மட்டுமே பொருட்கள்... அதிரடி உத்தரவு!

 
Ration

ரேஷன் கடையில் பொருள் வாங்க வரும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் தடுப்பூசி அவசியம் செலுத்தியிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முதன்மையாக அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் இன்று முதல் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை வாங்க வரும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் தடுப்பூசி அவசியம் செலுத்தியிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Vaccination

அதாவது, தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே ரேஷன் பொருட்களை வாங்க முடியும் என்றும், அதனால் கட்டாயம் அனைவரும் ரேஷன் கடைக்கு பொருட்களை வாங்க வரும்போது தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளின் முன்பும் ஒட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக ரேஷன் கடைகளில் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஓரிடத்தில் கூடுவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Ration

இதனால் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை வாங்க வருபவர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளத. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடைகளில் சரக்குகள் வழங்கப்படும் என்று நீலகிரி மாவட்ட நிர்வாகம் அண்மையில் அதிரடி உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை தொடர்ந்து தற்போது சேலத்தில் மாவட்ட ரேஷன் பொருட்கள் வாங்க, தடுப்பூசி போட்டிருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web