காதலுக்காக கணவனை கொன்று கிணற்றில் வீசிய மனைவி! திருமணமான நான்கே மாதத்தில் நடந்த கொடூரம்..

 
Pudukottai

புதுக்கோட்டை மாவட்டத்தில் கணவனை கொடூரமாக கொலை செய்து கிணற்றில் வீசிய மனைவியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம்  கந்தர்வகோட்டை அருகே போரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நந்தினி என்ற பெண்ணுக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு முன்பு புலவன்காடு பகுதியைச் சேர்ந்த இளைஞரை காதலித்து வந்த நந்தினியை, பெற்றோர் கட்டாயப்படுத்தி பாண்டிதுரைக்கு திருமணம் செய்துவைத்ததாக சொல்லப்படுகிறது.

இதனால், திருமணத்திற்கு பின்பும் தனது காதலை தொடர்ந்து வந்த நந்தினி, கணவருக்கு தெரியாமல் அந்த இளைஞரை சந்தித்து பேசி வந்ததாகவும், இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 20-ம் தேதியில் இருந்து பாண்டிதுரை காணவில்லை,  பல இடங்களில் தேடிய அவரது தாயார், ஆதனக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த வகையில் நந்தினியை போலீஸ் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்.

Pudukottai

இதனால் சந்தேகமடைந்த போலீஸ் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர், கணவனை கொன்று கிணற்றில் வீசியதாக நந்தினி கூறியதை கேட்டு போலீஸ் அதிர்ச்சியடைந்தனர்.

கடந்த 20ஆம் தேதி கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் பாண்டியன்துரை மனைவியின் கழுத்தை நெரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்து நந்தினி பதிலுக்கு அரிவாளால் தலையில் வெட்டியும், அடித்தும் கொலை செய்து, சடலத்தை அருகிலுள்ள உறைகிணற்றில் வீசியுள்ளார்.

மேலும், கணவனை கொலை செய்துவிட்டு, ஒன்றுமே தெரியாதது போல் நடித்த நந்தினி, குடும்பத்தினர் அவரை தேடும் போது தானும் சேர்ந்து தேடியிருக்கிறார். இதனையடுத்து அழுகிய நிலையில் உறை கிணற்றில் கிடந்த பாண்டிதுரையின் சடலத்தை போலீசார் மீட்டனர். இதனையடுத்து, நந்தினியை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web