கீழே கிடந்த செல்போனை காவல்நிலையத்தில் ஒப்படைத்த மூதாட்டி... பொன்னாடை போர்த்தி பாராட்டிய காவலர்கள்

 
Coimbatore

சாலையில் கிடந்த 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போனை காவல்நிலையத்தில் ஒப்படைத்த மூதாட்டியை போலீசார் பாராட்டினர்.

கோவை மாவட்டம் கேஜி சாவடி சோனா பேக்கரி அருகே கருப்புசாமி என்பவர் விலை உயர்ந்த செல்போனை கீழே தவற விட்டுவிட்டு சென்றுள்ளார்.

இதனை சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த கருப்பம்மாள் (வயது 60), வேலந்தாவளம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, சாலையோரத்தில் கிடந்த செல்போனை எடுத்து கே.ஜி சாவடி காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

அந்த செல்போன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, மூதாட்டியின் இந்த செயலுக்காக, போலீசார் அவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினர்.

From around the web