தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21.7 லட்சத்தை கடந்தது

 
Corona tamilnadu

இன்று ஒரே நாளில் 24,405 பேருக்கு கொரோனா பாதிப்பு என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 24,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது, இதனால் மொத்த பாதிப்பு 21,72,751 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் மேலும் 2,062 பேருக்கும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 22,343 பேருக்கு உறுதி செய்யபட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 5,11,272 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவிலிருந்து 32,221 பேர் குணமடைந்தயுள்ளனர், இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 18,66,660 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 2,80,426 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 1,68,698 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 2,75,36,393 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 460 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 25,665 ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

From around the web