முதலிரவில் பதற்றமாக இருந்த புது மாப்பிள்ளை..! அதிகாலையில் அலறிய மனைவி... போலீசில் கொடுத்த வாக்குமூலம்

 
Hanging

தமிழ்நாட்டில் திருமணம் முடிந்த பின்னர் முதலிரவு அறையிலேயே புதுமாப்பிள்ளை தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டின் போஸ்ட் நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருக்கும் அவரது அத்தை மகள் நந்தினி என்பவருக்கும் கடந்த 8-ம் திகதி திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில், திருமணம் நடந்து முதலிரவு முடிந்த அதிகாலையில் மணமகள் நந்தினி அலறியுள்ளார். இதனால் வீட்டில் இருந்த உறவினர்கள் நந்தினியின் ரூமுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது மணமகன் கார்த்திகேயன் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசார் தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் மணமகளிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கார்த்திகேயன் பதற்றத்தில் இருந்தார். எனவே நான் பரவாயில்லை. நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று சமாதானம் செய்தேன்.

பாத்ரூம் சென்று வந்தவரை கூடவே சென்று அழைத்து வந்து பக்கத்தில் படுத்து உறங்கிவிட்டேன். பின்னர் காலையில் எழுந்தபோது பக்கத்தில் ஆள் இல்லாததைக் கண்டு தேடியபோதுதான் தூக்கில் தொங்கியபடி இறந்துகிடந்தார் எனத் தெவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுமாப்பிள்ளை கார்த்திகேயனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

From around the web