அரசு கேபிள் நிறுவனத்துக்கு ரூ. 400 கோடி கடன் ஏற்படுத்திய அதிமுக அரசு - அமைச்சர் மனோ தங்கராஜ்

 
Mano-Thangaraj

அனைத்து கிராமங்களிலும் பாரத் நெட் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று(நேற்று) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில்,

தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களுக்கும் இணையதள வசதி வழங்கும் வகையில் ஒன்றிய அரசின் பாரத் நெட் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டின் அனைத்து இ-சேவை மையங்களில் உள்ள குளறுபடிகள் விரைவில் நீக்கப்படும். இ-சேவை மையங்களில் பணியாற்றக்கூடியவர்கள் அவர்களின் ஊதியத்தில் கடந்த கால ஆட்சியில் சில பிரச்சினைகள் இருப்பதாக கூறுகின்றனர்.

கேபிள் டிவியை பொறுத்தவரையில் 76 லட்சத்துக்கும் மேல் வாடிக்கையாளர்கள் இருந்தனர் ஆனால் இன்றைக்கு வெறும் 22 லட்சமாக குறைந்துள்ளது. அரசு கேபிள் நிறுவனத்துக்கு 400 கோடி கடனை கடந்த ஆட்சியிளார்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

From around the web