காலை முதல் முடங்கியிருந்த இ-பதிவு இணையதளம் மீண்டும் செயல்பட தொடங்கியது !!

 
E-Pass

தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வையொட்டி காலை முதல் முடங்கியிருந்த இ-பதிவு இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

தமிழ்நாட்டில் கொரோனா குறைந்து வரும் நிலையில் இன்று முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மளிகை, காய்கறிகள், இறைச்சி கடைகள், பழக்கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வாடகை ஆட்டோக்கள், கார்கள் மற்றும் எலக்ட்ரீசியன், பிளம்பர்கள், கணினி உள்ளிட்ட பொருட்கள் பழுது பார்க்கும் நபர்கள், தச்சர் உள்ளிட்ட சுயதொழில் செய்வோருக்கு இ-பதிவு உடன் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுயதொழில் செய்வோர் அதிக அளவில் பதிவு செய்ய முயன்றதால் இணையதளம் முடங்கியதாது. இன்று ஒரே நாளில் 60 லட்சம் பேர் இ-பதிவு செய்ய முயன்றதால் இணையதளம் முடங்கியதாக கூறப்பட்டது.

சற்று முன் கிடைத்த தகவலின்படி காலை முதல் முடங்கியிருந்த இ-பதிவு இணையதளம் மீண்டும் செயல்பட தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web