சுகாதாரத்துறை அதிகாரிகளை அரிவாளை கொண்டு விரட்டிய பெரியவர்..!

 
Nilgiris

நீலகிரியில் சுகாதாரத்துறை அதிகாரிகளை ஊருக்குள் நுழைய விடாமல் பெரியவர் ஒருவர் அரிவாளை எடுத்துக் கொண்டு வெட்டுவதற்கு விரட்டிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த புத்தூர் வயல் பகுதியில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 5 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் சளி காரணமாக நடத்தப்பட்ட முதல் கட்ட பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த கிராமத்துக்கு விரைந்த மாவட்ட சுகாதாரத்துறையினர் நகராட்சி ஆணையர் பாஸ்கரன் தலைமையில் அப்பகுதிக்கு சென்று கிருமிநாசினி தெளிப்பதற்கும் குழந்தைகளை மருத்துவத்துவ மனைக்கு அழைத்து செல்லவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சியில் ஊருக்குள் நுழைந்தனர்.

ஊரின் எல்லையில் கையில் அரிவாளுடன் நின்றிருந்த பெயரியவர் ஒருவர் கொரோனாவின் தீவிரத்தை அறியாமல் அங்கு வந்த அதிகாரிகளை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து தலையை வெட்டி விடுவேன் என்று விரட்ட ஆரம்பித்தார்

அப்பகுதி மக்களும் தங்கள் குழந்தைகளுக்கு எதுவும் கிடையாது என்றும் ஊருக்குள் வர வேண்டாம் என்றும் அரிவாள், இரும்பு கம்பி, கட்டைகளை வைத்து அவர்களை மிரட்டி ஊருக்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தினார்கள்.

இதையடுத்து கூடலூர் டிஎஸ்பி சசிகுமார் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு சென்று சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் பேச்சுவார்த்தை உடன்படவில்லை. இப்பகுதியில் ஆதிவாசிகளுக்கு என்று செயல்பட்டு வரும் தனி மருத்துவமனை அதிகாரிகளை அழைத்து கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றும் அப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை சிகிச்சைக்கு அனுப்ப முடியாது என திட்டவட்டமாக கூறியதையடுத்து அதிகாரிகள் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது.

இதனால் ஆதிவாசி கிராமங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

From around the web