மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்னை வந்தது மத்திய ஆய்வுக்குழு

 
Central-team-reaches-chennai

மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய ஒன்றிய உள்துறை இணைச் செயலாளர் தலைமையிலான குழுவினர் சென்னை வந்தனர்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய ஒன்றிய உள்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழுவினர் சென்னை வந்தனர். இந்த குழுவில் விவசாயம், நிதி, நீர்வளம், மின்சாரம், போக்குவரத்து, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

மத்திய குழு உறுப்பினர்கள் 2 பிரிவாக பிரிந்து சென்று வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் நாளையும் நாளை மறுநாளும் ஆய்வு நடத்த இருக்கின்றனர். அதன் பின்னர்,  நவம்பர் 24-ல் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசிக்க உள்ளனர்.

முதல்குழு நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும்  நாளை மறுநாள் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் ஆய்வு செய்ய இருக்கின்றது.

2-வது குழு நாளை குமரி மாவட்டத்திலும் நாளை மறுநாள் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் ஆய்வு செய்ய இருக்கின்றது.

From around the web