நேப்பியர் பாலத்தை கடக்கும் போது கார் ஏசியை மீறி நாற்றம் அடிக்கிறது! உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி !!

 
நேப்பியர் பாலத்தை கடக்கும் போது கார் ஏசியை மீறி நாற்றம் அடிக்கிறது! உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி !!

விழுப்புரம் மாவட்டம் நறையூர் கிராமத்தில் விவசாயநிலங்கள் வழியாக செல்லும் கால்வாயில் குடியிருப்புவாசிகள் கழிவுநீரை விடுவதாகவும் இதுபற்றி பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை என ரமேஷ் மணி என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்.ஆறுகள் நீரோடைகளில் கழிவுநீர் கலக்காமல் சுத்தமான நீர் கிடைக்க தேவைப்படும் இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச்செயலாளர் அறிவுறுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக தலைமைச்செயலாளர் தாக்கல் செய்ய வேண்டும். என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

படகு விடுவோம் என்று கூறிய கூவம் நேப்பியர் பாலத்தை கடக்கும்போது ஏசி காரின் மூடிய கதவுகளை மீறி சாக்கடை நாற்றம் வீசுகிறது. நீதிபதிகள் அதிகாலை கிரீன்வேஸ்ரோட்டில்  வாக்கிங்  போகும்போது இந்த நாற்றத்தை அனுபவிக்கிறார்கள் என தலைமை நீதிபதி தெரிவித்தார். 

அரசு மட்டும் நீர்மாசுபடுதலை தடுக்க  முடியாது.  நீரோடைகள் செல்லும் வழிக்கு பொறுப்பான ஊராட்சி தலைவர், ஊராட்சிமன்ற உறுப்பினர்கள், வட்டாரவளர்ச்சி அதிகாரிகள், ஊராட்சி அதிகாரிகள் எல்லோருக்கும் அபராதம் விதிக்க வேண்டும்.

சேவை செய்கிறோம் என உறுதிச்சொல்லி மக்கள் பிரதிநிதி ஆனவர்கள் நீர்ப்பாதுகாப்புக்கு தங்கள் பதவி அதிகாரம் செல்வாக்கு  பயன்படுத்த வேண்டியது தானே.  நீரோடை கரையோர வசிப்பவர்களுக்கு தெரியாமல் யாரும் கழிவுநீரை கலக்க முடியாது.. இந்த நீரோடைகளில்  இருந்து எடுக்கும் நீர் தான் ஒட்டியுள்ள கிராமங்களுக்கு குழாய் மூலம் வழங்கப்படும் என்று அறிவிப்பு பலகை நிறுவ வேண்டும். மக்கள் பங்களிப்பு இருந்தால் மட்டுமே நீர்மாசுபடுதலை தடுக்க முடியும்.

-வி.எச்,கே.ஹரிஹரன்

From around the web