தமிழ்நாட்டில் முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது

 
Localbody-election

முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது.

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில்  முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது.

5 மணிக்கு மேல் தேர்தலுக்கு தொடர்பு இல்லாத நபர்கள் ஊராட்சி பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் எனவும்  6-ம் தேதி வரை முதற்கட்ட தேர்தல் நடக்கும் பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள், பார்களை திறக்க் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களில் 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 78 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தலில் 41 லட்சத்து 93 ஆயிரத்து 996 பேர் வாக்களிக்க உள்ளனர்.

From around the web