தெற்காசியாவிலேயே இதற்கு ஏற்ற மாநிலம் தமிழ்நாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

 
CM-Stalin

தெற்காசியாவிலேயே தொழில் முதலீட்டிற்கு ஏற்ற மாநிலம் தமிழ்நாடு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஆங்கில நாளேடு கருத்தரங்கு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் ‘மெர்ச்சன்ட்ஸ் ஆப் மெட்ராஸ்’ என்ற வணிக பிரதியை வெளியிட்டார்.

அதன்பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

தெற்காசியாவிலேயே தொழில் முதலீட்டிற்கு ஏற்ற மாநிலம் தமிழ்நாடு. புதிய தொழில்களை தொடங்குவதற்கான உள்கட்டமைப்பை சீர்செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

CM-Stalin

அனைத்து மாவட்டங்களையும், அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதே தமிழக அரசின் நோக்கம். திமுக அரசின் 4 மாத ஆட்சி காலத்தில் தொழில்துறை புத்துணர்ச்சி அடைந்து உள்ளது.

ஏற்றுமதியில் இந்தியாவிலேயே 3-வது பெரிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. 3-வது இடத்தில் உள்ள தமிழ்நாட்டை முதலிடத்துக்கு கொண்டுவர தமிழ்நாடு அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

From around the web