தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இங்கே... பிரதமர் மோடி எங்கே..? பாஜகவினருக்கு கேள்வி ஏழுப்பிய ஜோதிமணி !

 
Jothimani-Stalin

#GobackStalin என்று ட்ரெண்ட் செய்யும் பாஜகவினரே இதோ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இங்கே. பிரதமர் மோடி எங்கே? என்று காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கேள்வி ஏழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னையை பின்னுக்கு தள்ளி மாநில அளவில் கோவை மாவட்டம் முதலிடம் பெற்று உள்ளது. நாள்தோறும் தொற்று பாதிப்பு 4 ஆயிரத்தை கடக்கிறது. தினசரி 30 பேருக்கு மேல் இறப்பு உள்ளது.

கோவைக்கு அடுத்தபடியாக திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டு கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.

இந்த சூழலில், ட்விட்டரில் #GoBackStalin என்ற ஹேஷ்டேக் தேசிய அளவல் முதலிடம் பிடித்துள்ளது.

இந்நிலையில், #GobackStalin என்று ட்ரெண்ட் செய்யும் பாஜகவினரே இதோ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இங்கே. பிரதமர் மோடி எங்கே? என்று காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கேள்வி ஏழுப்பியுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இந்த நெருக்கடியான கொரொனா தொற்று காலத்தில் உருப்படியாக ஒன்றும் செய்யாமல் #GobackStalin என்று ட்ரெண்ட் செய்யும் பிஜேபியினரே இதோ தமிழக முதல்வர் ஸ்டாலின் இங்கே. பிரதமர் நரேந்திர மோடி எங்கே?” என்று பதிவிட்டுள்ளார்.


 

From around the web