வரும் 19-ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது

 
CM-Stalin

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த வாரம் முதல் பரவலாக பெய்து வரும் கனமழையால் வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு இடங்கள் பாதிப்புக்குள்ளானது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்கள்.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் 19-ம் தேதி மாலை 5 மணிக்கு தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் வெள்ள பாதிப்புகள், நிவாரணப் பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது.

From around the web