தாம்பரம், ஆவடியில் புதிய காவல் ஆணையரகம்; சட்டப்பேரவையுல் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 
CM-Stalin

தாம்பரம், ஆவடியை தலைமையிடமாக கொண்டு தனித்தனி காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடைசி நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகின்றது. இன்றைய கூட்டத்தில் காவல்துறைக்கு பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அப்போது, “தாம்பரம், ஆவடியை தலைமையிடமாக கொண்டு தனித்தனி புதிய காவல் ஆணையாளர் அலுவலகங்கள் அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

தற்போது தாம்பரம், ஆவடி ஆகிய இரண்டு பகுதிகளும் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது.

முன்னதாக, பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட நகராட்சிகளை ஒன்றிணைத்து தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

From around the web