ஓடும் காரில் திடீர் தீ விபத்து... 2 குழந்தைகள் உட்பட 9 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்..!

 
Car-fire-in-tiruvallur

சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் ஓடிக்கொண்டிருந்த காரில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பெருவாயில் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த மகேந்திரா ஸ்கார்பியோ காரில் திடீரென தீப்பற்றி எரிந்தது. காரில் இருந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் உடனடியாக வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், ஒரு குடும்பம் கோயம்பேட்டிலிருந்து சக்தியவேடு பகுதியில் உள்ள பெருவாயல் கோவிலுக்கு சென்றுள்ளனர். கார் சென்று கொண்டிருந்த போது இன்ஞ்சின் அடியில் இருந்து புகை வந்ததை கண்டறிந்த டிரைவர் காரில் இருந்து இறங்கி பார்த்துள்ளார்.

அப்போது, ஸ்கார்பியோ கார் திடீரென தீ பற்றி எரியத் தொடங்கியதாக கூறப்படுகிறது. அப்போது, காரில் இருந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் காரில் இருந்து இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.  

தகவலறிந்து விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து,  கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

From around the web