வகுப்பை கட் அடித்த மாணவர்கள்... சரமாரியாக அடித்து, காலால் உதைத்த வாத்தியர்.. வைரல் வீடியோ

 
Chidambaram

சிதம்பரத்தில் அரசுப் பள்ளி மாணவர் ஒருவரை, பள்ளிக்கு சரியாக வரவில்லை எனக் கூறி ஆசிரியர் ஒருவர் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் புதன்கிழமை மதியம் 12-ம் வகுப்பு இயற்பியல் படிக்கும் மாணவர்கள் 6 பேரை அந்தப் பள்ளியின் ஆசிரியர் சுப்பிரமணியன் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுதொடர்பாக வெளியான வீடியோவில், வகுப்புக்கு சரியாக வரவில்லை என்ற காரணத்திற்காக மாணவரை, சக மாணவர்கள் முன்னிலையில், முட்டிபோட வைத்து பிரம்பால் ஆசிரியர் கடுமையாக அடித்துள்ளார்.


மேலும் அதோடு நிற்காமல், அந்த மாணவரை ஆசிரியர் கால்களால் எட்டியும் உதைக்கிறார். கொரோனா காலத்தில் மாணவர்களை பள்ளி வர சொல்லிக் கட்டாயப்படுத்தக்கூடாது என அரசு அறிவுறுத்திய போதும் ஆசிரியர் மாணவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆசிரியர் ஒருவர் பிரம்பால் அடித்து கால்களால் உதைக்கும் காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web