வலுவடைந்தது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி; மழை அதிகரிக்கும்!!

 
Cyclone

அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் கடந்த 13-ந் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. அடுத்த 12 மணி நேரத்தில்  காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது  என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்,  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்போது மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கக்கூடும். தெற்கு ஆந்திரா - வட தமிழ்நாடு கடற்கரை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக காலையில் மழை சற்று குறைவாக காணப்பட்டாலும், பிற்பகலில் மழை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web