ஜூலை 31-ந் தேதி வரை மட்டுமே ஸ்டெர்லைட் !!

 
ஜூலை 31-ந் தேதி வரை மட்டுமே ஸ்டெர்லைட் !!

ஜூலை 31-ந் தேதி வரை மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2-ம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மோசமாகிக் கொண்டே செல்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த சூழலில் நாடு முழுவதும் ஆக்சிஜன் கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாடியது. இந்நிலையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது
 
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நிபந்தனைகளுடன் மேற்கொள்வதற்கு வேதாந்தா நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் நேற்று அனுமதி அளித்திருந்தது.

அதில், ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31-ந் தேதி வரை ஆக்ஸிஜன் தயாரிக்கலாம் என்றும், அதன் பிறகு, அப்போதைய சூழலைப் பொறுத்து, தேவைப்பட்டால் மறு ஆய்வு செய்யப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்புப் பணிகளை மேற்பார்வையிட மாவட்ட கலெக்டர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும் என்றும், தாமிர உருக்காலை பிரிவுக்குள் யாரும் நுழையக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

From around the web