திருச்சியில் தரையிறங்கிய விமானத்தில் காத்திருக்கும் சபாநாயகர் அப்பாவு !!

 
Appavu

தூத்துக்குடியில் கனமழை பெய்து வருவதால் சென்னையிலிருந்து வந்த விமானம் தரையிறங்க முடியவில்லை.

பகல் 12:30 மணியில் சென்னையில் புறப்பட்ட இண்டிகோ விமானம், தூத்துக்குடியை நெருங்கியதும் தாழ்வான உயர்த்தில் வட்டமிட்டது. விமான நிலையம் அருகே வரையிலும் வந்த விமானம், சட்டென வேகம் எடுத்து மேல்நோக்கி உயரமாகப் பறக்கத் தொடங்கியது.

உறவினர்களையும் நண்பர்களையும் அழைப்பதற்கு வந்திருந்தவர்கள், விமானம் மீண்டும் உயரே செல்வதைப் பார்த்துதும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர். பின்னர் மதுரையிலும் மழை காரணமாக இறங்க முடியவில்லை என்று திருச்சி நோக்கி விமானம் சென்றது.

இந்த நிலையில், விமான நிறுவனத்தினர் அடுத்து என்ன முடிவு செய்யப்போகிறார்கள் என்ற தெரியாத நிலையில், திருச்சியில் விமானத்தின் உள்ளேயே சபாநாயகர் அப்பாவு காத்துக் கொண்டிருக்கிறார்.

திருச்சியில் தரையிறங்கிய விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் விமானத்தின் உள்ளேயே காத்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசியாக வந்த தகவல் படி திருச்சியிலுருந்து தூத்துக்குடி நோக்கி மீண்டும் புறப்பட தயாராகி வருகிறது.

From around the web