அதிர்ச்சி! பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் மரணம்!!

 
அதிர்ச்சி! பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் மரணம்!!

தமிழ்த்திரைப்பட உலகில் வித்தியாசமான படங்களை இயக்கி வந்த பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் மரணமடைந்துள்ளார். 54 வயதான கே.வி.ஆனந்துக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்துள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கே,வி.ஆனந்துக்கு அதிகாலை 3 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

கே.வி.ஆனந்த்தின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.  அவரது உடலுக்கு பொதுமக்கள் மற்றும் திரைத்துறையினர் அஞ்சலி செலுத்திய பிறகு, இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

ஸ்டில் போட்டோகிராபராக திரைப்பயணத்தை தொடங்கிய கே.வி.ஆனந்த், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட பல முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். 1995 ஆம் ஆண்டு, ‘தென்மாவின் கொம்பத்து’ என்ற மலையாளத் திரைப்படத்திற்காக, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதையும்  பெற்றார். பின்னர் இயக்குனராக அவதாரம் எடுத்த கே.வி.ஆனந்த்தின்  அயன், கோ, அனேகன், காப்பான் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. 

கே.வி.ஆனந்தினி மறைவு தமிழ் திரையுலகினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

From around the web