செப்டம்பர் 17ம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும்; சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

 
Periyar

பெரியார் நடத்திய போராட்டங்கள் யாரும் காப்பி அடிக்க முடியாத போராட்டங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை மீதான மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் 110-ன் விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதி  ஆண்டுதோறும் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என கூறியுள்ளார்.

110 விதியின் கீழ் முதல்வர்  மு.க.ஸ்டாலின் கூறியதாவது, “சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி தமிழ்நாட்டில் சமூக நீதிக்கு வித்திட்டவர் பெரியார்.

CM-Stalin


 
அவர் எழுதிய எழுத்துகள், யாரும் எழுதத் தயங்கியவை. அவர் பேசிய பேச்சுகள் யாரும் பேச பயந்தவை. அவர் நடந்த நடை, நடத்திய சுற்றுப்பயணம், மாநாடுகள் குறித்துப் பேசுவதென்றால், தமிழ்நாடு சட்டப்பேரவையை 10 நாட்கள் ஒத்திவைத்துவிட்டுத்தான் பேச வேண்டும்.

பல்வேறு சமூக நீதிப் போராட்டங்களை முன்னெடுத்தவர் பெரியார். நாடு முழுவதும் சமூக நீதி பரவ பெரியார் அளித்த அடித்தளமே காரணம். பெரியாரின் குருகுலப் பயிற்சிதான் திமுகவை உருவாக்கியது.
 
பெரியார் குறித்து இந்த வரலாற்றுச் சிறப்புக்குரிய அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். அதன்படி, பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி தமிழகத்தில் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் என அறிவிக்கிறேன்.

தமிழ்நாட்டிலுள்ள தலைமைச் செயலகம் தொடங்கி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூக நீதி நாளான செப்டம்பர் 17-ம் தேதி அன்று உறுதிமொழி எடுக்கப்படும்” என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

From around the web