அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும்: உயர்கல்வித்துறை அதிரடி

 
College

அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ள சூழலில் தற்போது கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளன. பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 13-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள்  நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆன்லைன் மூலம் கல்லூரி வகுப்புகளை நடத்திவிட்டு செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்தக் கூடாது என்றும், ஆன்லைனிலேயே நடத்த வேண்டும் எனக் கோரியும் மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் என அனைத்து வகை  கல்லூரிகளிலும் தேர்வுகள் நேரடியாகவே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web