நடிகர் சூர்யாவை தாக்கினால் ரூ.1 லட்சம் பரிசு.. பாமக நிர்வாகி பழனிசாமி மீது பாய்ந்தது வழக்கு..!

 
Jai-Bhim

நடிகர் சூர்யாவை தாக்குபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவித்த பாமக மாவட்ட செயலாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இயக்குநர் தா.செ.ஞானவேல் ‘ஜெய்பீம்’ என்ற திரைப்படத்தை, எழுதி இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

படத்தின் கரு பலராலும் பேசப்பட்ட அதே சமயம், படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளும் சர்ச்சையாயின. இதையடுத்து நடிகர் சூர்யாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டங்கள் தெரிவிக்கப்பட்டது.

PMK

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  பாமக மாவட்ட செயலாளர், “ஜாதி கலவரத்தை தூண்டும் வகையிலும், வன்னிய சமுதாய மக்களை இழிவுபடுத்திய நடிகர் சூர்யா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் அவரை தாக்கும் இளைஞர்களுக்கு ஒரு  லட்சம் ரூபாய் பரிசு  அளிக்கப்படும். சூர்யாவின் எந்த படத்தையும் இந்த மாவட்டத்தில் திரையிடுவதற்கு பாமக அனுமதிக்காது” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவை தாக்கினால் ரூ.1 லட்சம் பரிசு அறிவித்த பாமக மாவட்ட செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது 5 பிரிவுகள் கொண்ட பிரிவுகளில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

From around the web