திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!

 
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த சுற்றுகளில் திமுகதான் முன்னிலை வகித்து வருகிறது. அதே சமயம் அதிமுக எதிர்பார்த்ததை விட பல தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 159 தொகுதிகளில் முன்னிலை பெற்று தனது வெற்றியை உறுதி செய்துள்ளது.

இதனையடுத்து மு.க. ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். பல்வேறு மாநில முதல்வர்களும், அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில்,அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்ய வாழ்த்துகிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

From around the web