கமல் ஹாசன் தோல்வியைக் கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!!

 
கமல் ஹாசன் தோல்வியைக் கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!!

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல் ஹாசன், எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவியுள்ளார்.

கடும் இழுபறி நிலையாக வாக்கு எண்ணிக்கை நீடித்து வந்த நிலையில் இறுதிச்சுற்றுகளில் பின்னடைவு ஏற்பட்டது.  கமல்ஹாசன் 51,087 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் வானதி சீனிவாசன் 52,526 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளர்.

மும்முனை போட்டியில் இறுதியாக  1,439 வாக்குகளில் தோல்வியை சந்தித்துள்ளார் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் தொண்டர்களும் கமல் ஹாசன் ரசிகர்களும் சோகத்தில் மூழ்கியிருக்க, ரஜினி ரசிகர்களில் ஒரு சாரார் இந்த தோல்வியை கொண்டாடி வருகிறார்கள்.

எங்கே கமல் ஹாசனின் வெற்றிக்கு ரஜினி வாழ்த்து சொல்லிவிடுவாரோ என்று கவலையில் இருந்தவர்களுக்கு, மகிழ்ச்சி தாங்க முடியவில்லை போலும். யார் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை கமல் ஹாசன் வெற்றி பெற்றால் தங்களுக்கு தோல்வி என்று கருதிக் கொண்டு, தற்போது ஆனந்தக் கூத்தாடிக் கொண்டுள்ளார்கள் இந்த ரசிகர்கள்.

ரஜினியின் அரசியல் முடிவுக்குப் பிறகு, அவருடைய பல்வேறு ரசிகர்கள் திமுக, அதிமுகவில் சேர்ந்ததும் பல தீவிர ரசிகர்கள் அரசியல் கருத்துக்களை தவிர்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

ரஜினியும் கமலும் தாங்கள் நெருங்கிய நண்பர்கள் என்று கூறி வந்தாலும், அவர்களுடைய ரசிகர்களின் மோதல் காலம் காலமாக நீடித்து வருகிறது. அது கமல் ஹாசனின் தோல்வியை கொண்டாடும் மன நிலைக்குப் போயுள்ளது வருந்தத்தக்கது.

From around the web