பி.எஸ்.பி.பி பள்ளி மானவிகளுக்கு பாலியல் தொந்தரவு... ஆசிரியர் ராஜகோபாலனை தொடர்ந்து கராத்தே மாஸ்டர் கைது!

 
PSBB

சென்னை அண்ணாநகரில் உள்ள பி.எஸ்.பி.பி பள்ளி கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கே. கே. நகரில் உள்ள பி.எஸ்.பி.பி பள்ளி மாணவிகள் கொடுத்த புகார் காரணமாக, கணக்குப் பதிவியல் மற்றும் வணிகப் படிப்புகள் ஆசிரியராக ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது அதே பள்ளியை சேர்ந்த மேலும் ஒரு ஆசிரியர் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சற்று முன்னர் அந்த பள்ளியின் இன்னொரு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணாநகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இதனை அடுத்து கராத்தே மாஸ்டர் கெவின் ராஜை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஏற்கனவே கே.கே நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளியில் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அண்ணாநகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ் கைது செய்யப்பட்டு இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web