தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு

 
Local-body-election

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 78 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 755 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 1,577 கிராம ஊராட்சி தலைவர், 12,252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.

இதற்காக 7,921 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்குப்பதிவை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

கடைசி ஒருமணி நேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், அதற்கான அறிகுறி உள்ளவர்களும் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

From around the web