திமுகவில் பதவிகள் விற்பனை... போஸ்டரில் அம்பலமான உட்கட்சி பூசல்! சிதறும் மதுரை திமுக!

 
Madurai-DMK

மதுரை நகர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் திமுகவில் சலசலப்பு எழுந்துள்ளது.

மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளராக முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் இருந்து வருகிறார். தேர்தலுக்கு முன்பில் இருந்தே இதே பதவில் தான் வகித்து வருகிறார். தனது மகன் பொன் சேதுவுக்கு அல்லது மருமகளுக்கு மேயர் பதவி வாங்கி விடவேண்டும் என முயற்சி எடுத்து வருகிறார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மதுரை வடக்கு மாவட்டத்தில் பொறுப்புகளை தனக்கு விஸ்வாசமான ஆட்களுக்கு மட்டும் வழங்குவதாக புகைச்சல் இருந்து வருகிறது. இந்நிலையில் இதை உறுதி செய்யும் விதமாக பாதிக்கப்பட்ட திமுக தொண்டர்கள் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

அந்த போஸ்டர்களில், மாநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி பொறுப்பிற்கு ரூ.5 லட்சம், பகுதி செயலாளர் பொறுப்பிற்கு ரூ.3 லட்சம், மாவட்ட பிரதிநிதி பொறுப்பிற்கு ரூ.3 லட்சம், வட்ட செயலாளர் பொறுப்பிற்கு ரூ.2.50 லட்சம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

Madurai-DMK

மேலும், இந்த பதவிகளுக்கு "குண்டாஸ் பெற்றவர்கள்" தகுதி உடையவர்கள் என்றும், "உழைத்தவனுக்கு ஒன்றும் இல்லை, பணம் இருந்தால் கட்டாயம் பதவி உண்டு" என்ற வாசகங்களும் அந்த போஸ்டர்களின் இடம்பெற்றுள்ளன. மதுரை மாநகர் வடக்கு மாவட்ட திமுக உண்மை தொண்டர்கள் எனும் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது திமுக மற்றும் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.

அதேநேரத்தில் இந்த போஸ்டரை ஒட்டியவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. உண்மையில் திமுக தரப்பினர்கள் தான் ஒட்டினார்களா? அல்லது குழப்பத்தை உண்டாக்க மற்ற கட்சியினர் போஸ்டர் ஒட்டினார்களா என்பது தெரியவில்லை.

From around the web