அப்பாவிடம் தோற்ற பொன் ராதாகிருஷ்ணன் மகனிடம் மீண்டும் தோல்வி!

 
அப்பாவிடம் தோற்ற பொன் ராதாகிருஷ்ணன் மகனிடம் மீண்டும் தோல்வி!

கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் தோல்வியைத் தழுவுகிறார். 2019ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் எச்.வசந்தகுமாரை எதிர்த்துப் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் மிகப்பெரிய வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார் எச்.வசந்த்குமார் எம்.பி. அதனால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் எச்.வசந்த்குமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிட்டார்.  வாக்கு எண்ணிக்கையில் விஜய் வசந்த் முன்னிலையில் உள்ளார். 55.60% சதவீதம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

அப்பாவிடம் தோற்ற பொன் ராதாகிருஷ்ணன் மகனிடமும் தோல்வியுறுவது தமிழக அரசியலில் புதிய வரலாறாகவும் அமைந்துள்ளது.

பொன் ராதாகிருஷ்ணனுக்கு 36.41 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. மீண்டும் தோல்வியை தழுவியுள்ள பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? அல்லது அரசியலிலிருந்து ஓய்வு பெறுவாரா?  என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

From around the web