மணல் எடுக்க அனுமதி தேவையில்லை; சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

 
Duraimurugan

மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல்சூளை வைத்திருப்பவர்கள் மணல் எடுக்க அனுமதி தேவையில்லை என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுசூழல் அனுமதி, மண் பரிசோதனைக்கு பிறகே மண் எடுக்க வேண்டும் என முன்பு விதிமுறை இருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அரசு சார்பில் எடுக்கப்படும் மணலுக்கு சுற்றுசூழல் அனுமதி தேவையில்லை என கடந்த ஜூலை 30-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை வைத்திருப்பவர்கள் மண் எடுக்க கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல்சூளை வைத்திருப்பவர்கள் சுற்றுசூழல் அனுமதியின்றி 1.5 மீட்டர் வரை மண் எடுத்துக்கொள்ளலாம். மணல் எடுப்பதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்த வேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

From around the web