நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு நிரந்தர விலக்கு: சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள மசோதா

 
Secretariat

சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நீட் விலக்கு மசோதாவில் நீட் தேர்வு தொடர்பாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டு தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த குழு தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்த மசோதாவில், “நீட் தேர்வு நடுநிலையான தேர்வு முறை இல்லை என்பது ராஜன் குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையின் மூலம் தெளிவாகிறது. கட்டாயமாக எதிர்கொள்ளும் கூடுதல் தேர்வான நீட்டால், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாணவர்களுக்கு சுமை ஏற்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளாக சமூக, பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களின் நம்பிக்கை, கனவை நீட் தேர்வு தகர்த்துள்ளது.

மேலும், நீட் தேர்வு சமத்துவமின்மையை வளர்ப்பது மட்டுமின்றி, சிறப்பு பயிற்சி பெறக்கூடிய சமூகத்தின் பொருளாதார மற்றும் அதிக சலுகை பெற்ற வகுப்பினரை ஆதரிக்கிறது. ஆகையால், சமூகநீதியை உறுதி செய்ய, சமத்துவம் மற்றும் சமவாய்ப்பை நிலைநிறுத்த சட்டம் ஒன்றை இயற்ற அரசு முடிவு” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

From around the web