கொரோனா விதிமுறைகளை மீறி பேருந்துகளில் அலைமோதும் மக்கள்..! அலட்சியமா..?

 
கொரோனா விதிமுறைகளை மீறி பேருந்துகளில் அலைமோதும் மக்கள்..! அலட்சியமா..?

தமிழகத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தற்போது தொற்று எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்த நிலையில், கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, கடந்த 20-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும். அதேபோல், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பேருந்துகளில் பொதுமக்கள் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் பேருந்துகளில் முகக்கவசம் அணியாமலும், கூட்டுத்துடன் கூட்டமாக நின்று கொண்டும் பயணம் செய்து வருகின்றனர்.

மக்களின் அலட்சியத்தால் நாம் இன்னும் எவ்வளவு இன்னல்களுக்கு ஆளாக போகிறோம் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

From around the web