ஆக்சிஜன் தயாரிப்பு ! அந்தர் பல்டி அடிக்கும் ஸ்டெர்லைட் !!

 
ஆக்சிஜன் தயாரிப்பு ! அந்தர் பல்டி அடிக்கும் ஸ்டெர்லைட் !!

நாட்டில் மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதால் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்து தருகிறோம், அனுமதி தாருங்கள் என்று உச்சநீதிமன்றத்தை நாடியது ஸ்டெர்லைட் உரிமையாளர்களான வேதாந்த நிர்வாகம்.

ஏன் அனுமதிக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. மக்களின் எதிர்ப்பை மீறி திறக்க அனுமதிக்க முடியாது என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதிக்க மறுப்பது சரியல்ல என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாடு அரசே கையகப்படுத்தி, ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாமா என்று கருத்து கேட்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்புவ் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்டெர்லைட் நிர்வாகம், அரசாங்கம் ஆலையை கையகப்படுத்த அனுமதிக்க மாட்டோம். நாங்களே நடத்தினால் தான் ஆக்சிஜன் உற்பத்தி செய்து தருவோம் என்று நீதிமன்றத்தில் கூறியுள்ளது. 

நாட்டில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்குவது தான் ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் உண்மையான நோக்கம் என்றால், அரசே எடுத்து நடத்துவதை ஏன் அவசரமாக மறுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆக்சிஜன் தயாரிப்பு என்ற போர்வையில் ஆலையைத் திறந்து வேறு ஏதோ நோக்கத்தை செயல்படுத்த ஸ்டெர்லைட் நிர்வாகம் திட்டமிடுகிறதோ என்றும் கேள்விகளை எழுப்புகிறார்கள்.

எக்காரணம் கொண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்று தூத்துக்குடி பொதுமக்கள் கூறுகிறார்கள்.

From around the web