சட்டமன்றத்தில் நிதிநிலை தாக்கல் … உச்சநீதிமன்றத்தில் தகுதி நீக்க வழக்கில் விசாரணை!

2020-21 ம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய துணை முதலமைச்சரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்திற்கு சென்றுள்ளார். காலை 10 மணி அளவில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்ப்பட உள்ளது. 2021ம் ஆண்டு தேர்தலுக்கு முந்தைய அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் என்பதால், ஏராளமான சமூகநலத் திட்டங்களும் சலுகைகளும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. சட்டமன்றத்தில் நிதிநிலை தாக்கல் செய்யும் அதே வேளையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதிநீக்க
 

சட்டமன்றத்தில் நிதிநிலை தாக்கல் … உச்சநீதிமன்றத்தில் தகுதி நீக்க வழக்கில் விசாரணை!2020-21 ம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய துணை முதலமைச்சரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்திற்கு சென்றுள்ளார். காலை 10 மணி அளவில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்ப்பட உள்ளது.

2021ம் ஆண்டு தேர்தலுக்கு முந்தைய அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் என்பதால், ஏராளமான சமூகநலத் திட்டங்களும் சலுகைகளும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

சட்டமன்றத்தில் நிதிநிலை தாக்கல் செய்யும் அதே வேளையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதிநீக்க வழக்கு விசாரணைக்கு வருகிறது.

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், 11 எம்..எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

http://www.A1TamilNews.com 

From around the web