தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு... நாளை அறிவிப்பு வெளியாகலாம்!!

 
Lock-down

தமிழ்நாட்டில் கூடுதலாக சில தளர்வுகளுடன் பொது முடக்கத்தை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கலாம் என அரசு அதிகாரிகள் பரிந்துரைத்ததாக தெரிகின்றது.

தமிழ்நாட்டில் கொரோனா 2-ம் அலை தீவிரமடைந்திருந்ததன் காரணமாக கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக கடந்த மாதம் 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் ஊரடங்கு ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் சற்று குறைய தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 14-ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற உயர் அதிகாரிகள், தமிழ்நாட்டில் கொரோனா குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் மேலும் சில தளர்வுகள் அளித்து ஜூன் 21-ம் தேதி வரை நீட்டிக்கலாம் என பரிந்துரைத்துள்ளனர். மேலும், கொரோனா குறைவாக உள்ள மாவட்டங்களில் உள்ள மதுபானக் கடைகளை டோக்கன் முறையில் திறக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை அமைச்சர், முதன்மைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

ஊரடங்கு தளர்வுகள் மற்றும் நீட்டிப்பு குறித்த அறிவிப்பை நாளை முதல்வர் வெளியிடுவார் என தெரிகின்றது.

From around the web